5 நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் ஆரம்பம்

டெல்லி: ஜூலை 2 – பிரதமர் மோடி 8 நாள் சுற்றுப்பயணமாக 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார். மோடியின் நீண்ட நாள் வெளிநாட்டு பயணமாக இது பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீண்ட நாள் சுற்றுப்பயணமாக 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். மொத்தமாக 8 நாட்கள் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பிரேசில், நமீபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் மோடி, அந்நாட்டு தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமர் மோடி 8 நாள் சுற்றுப்பயணமாக ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் மோடி, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்கிறார். முதல் பயணமாக கானா செல்லும் பிரதமர் மோடி, அடுத்ததாக கரீபிய நாடான டிரினிடாட் மற்றும் டோபாகா செல்கிறார். முதல் முறையாக பின்னர் அர்ஜென்டினா செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து பிரேசில் பயணம் மேற்கொள்கிறார். பிரேசிலில் நடைபெறும் 17-வது உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, தனது 8-நாள் சுற்றுப்பயணத்தின் நிறைவாக நமீபியா செல்கிறார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவர் கானா நாட்டிற்கு செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது 30 வருடங்களில் முதல் முறையாகும். கானா நாட்டு நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். கரீபியன் நாட்டிற்கு அந்நாட்டு பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் கரீபியன் நாட்டிற்கு செல்வது 25 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
தனது சுற்றுப்பயணத்தில் மூன்றாவது நாடாக அர்ஜென்டினாவிற்கு பிரதமர் மோடி செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜேவியர் மிலே விடுத்த அழைப்பை ஏற்று அர்ஜென்டினாவிற்கு மோடி செல்கிறார். இந்த பயணத்தின் போது இரு தலைவர்களும் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது, பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, வர்த்தகம், முதலீடு ஆகியவை பற்றி இருதரப்பு ஆலோசனை நடத்த உள்ளனர். பிரிக்ஸ் உச்சி மாநாடு அர்ஜென்டினாவைத் தொடர்ந்து, பிரதமர் பிரேசில் நகருக்கு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள செல்கிறார். பிரதமர் மோடி பிரேசில் செல்வது இது நான்காவது முறையாகும். பிரிக்ஸ் மாநாட்டில், சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கவலைகளை பிரதமர் மோடி எழுப்ப உள்ளார். பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பிரிக்ஸ் மாநாட்டின் தலைவர்கள் கண்டிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது சுற்றுப்பயணத்தின் நிறைவான நாடாக நமீபியா உள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் நமீபியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை. இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி, நமீபியா அதிபர் நெடும்போ நந்தி நேடிவாத்வை சந்தித்து பேசுகிறார். நமீபியா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.