கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்

சென்னை:ஜூலை 4 – அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஜூலை 7-ம் தேதி கோவை​யில் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கு​மாறு பாஜக தலை​வர்​களுக்​கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார்.
2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, அனைத்து தொகு​தி​களி​லும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ள​தாக பழனி​சாமி அறி​வித்​திருந்​தார். பல்​வேறு காரணங்​களால் சுற்​றுப்​பயணம் தள்​ளிப்​போனது. இந்​நிலை​யில் `மக்​களை காப்​போம்- தமிழகத்தை மீட்​போம்’ என்ற தொடர் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை​யில் தொடங்​கு​வ​தாக பழனி​சாமி அறி​வித்​துள்​ளார்.
நிர்வாகிகள் ஏற்பாடு: முதல்​கட்ட சுற்​றுப் பயணத்​தில் கோவை, விழுப்​புரம், கடலூர்,தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் உள்ள தொகு​தி​களில் வரும் 21-ம் தேதி பிரச்​சா​ரம் மேற்​கொள்ள இருக்​கிறார். முதல் நாளான ஜூலை 7-ம் தேதி கோவை மேட்​டுப்​பாளை​யம் தொகு​தி​யில் பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறார். அன்று கவுண்​டம்​பாளை​யம் தொகு​தி​யிலும் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். 5 இடங்​களில் பழனி​சாமி பேச, கோவை மாவட்ட அதி​முக நிர்​வாகி​கள் ஏற்​பாடு​களைச் செய்து வரு​கின்​றனர்.
மேலும், சுற்​றுப்​பயணம் செல்​லும் இடங்​களில் தொழில்​முனை​வோர் மற்​றும் தொழிலா​ளர்​களைச் சந்​தித்​து, அவர்​களின் குறை​களை கேட்​டறிந்​து, அதி​முக ஆட்சி அமைந்​தால் அதற்​கான தீர்வு​கள் கிடைக்​கும் என பழனிசாமி உறு​தி​யளிக்க இருப்​ப​தாக​வும் அதி​முக வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.