
பெங்களூரு: ஜூலை 7-
இளைஞரை கடத்தி சென்று ஆடையை அவிழ்த்து கொடூரமாக தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பெங்களூர் சோழ தேவனஹள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான
இளைஞர் குஷால், உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த், யஷ்வந்த், சிவசங்கர், சஷாங்க் கவுடா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை சோலதேவனஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.
குஷலும் அந்த இளம் பெண்ணும் கல்லூரி நாட்களில் காதலித்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். இந்த நேரத்தில் இதைத் தாங்க முடியாமல், குஷால் அந்த இளம் பெண்ணுக்கு ஆபாசமான செய்தியை அனுப்பி இருக்கிறார். இதைத்தொடர்ந்து இளம் பெண்ணின் காதலனும் அவரது நண்பர்களும் குஷாலை பாகல்குண்டேவில் உள்ள ஏஜிபி லேஅவுட்டுக்கு அழைத்துச் சென்று
அவரை நிர்வாணமாக்கி அந்த செயலை வீடியோ எடுத்துள்ளனர்.
வீடியோவில், ரேணுகாசாமி கொலை வழக்கு போல இது நடக்கும் என்று மிரட்டி உள்ளனர் குற்றவாளிகளை கைது செய்துள்ள போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்