நியூயார்க், ஜூலை 8- உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் இன்னும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் அதிருப்தியில் இருக்கும் டிரம்ப் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால் சில நாட்களிலேயே தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ள டிரம்ப், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இருநாடுகளும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளுக்கும் இடையே இருந்த எல்லை பிரச்சனை மற்றும் உக்ரைனின் நேட்டோ அமைப்பில் சேர முயன்றது உள்ளிட்டவை ரஷ்யாவை கோபப்படுத்தியது. இதையடுத்து கடந்த 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளும் பயங்கரமாக மோதி வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.
இதனால் ரஷ்யவை உக்ரைன் சமாளித்து வருகிறது.
 
