கேரளா: ஜூலை 9 –
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு, பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரளா மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில், நிபா வைரஸ் பரவல் உள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். , தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வவ்வால், பன்றி வாயிலாக, நிபா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை தடுக்க, எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.















