அரசு ஊழியர்களின் சம்பளம் 34% உயரும்

டெல்லி, ஜூலை 11- எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே புதிய ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தவுடன், ஊழியர்கள் 30-34% வரை சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று ஆம்பிட் கேபிடல் நிறுவனம் கணித்துள்ளது. மேலும், இந்த ஊதிய உயர்வு 2026-27 நிதியாண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன்படி இப்போது 8வது ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊதிய குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆம்பிட் கேபிடல் என்ற நிறுவனம் சில முக்கிய கணிப்புகளை அளித்துள்ளது. எட்டாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது, ஊழியர்கள் சம்பளம் 30-34% வரை உயரலாம் என்று ஆம்பிட் கேபிடல் தெரிவித்துள்ளது.