டெல்லி, ஜூலை 11- இஸ்ரேலின் ‘லோரா’ எனும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இந்தியா தனது சுகோய் Su-30MKI போர் விமானங்களில் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா அச்சடையும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘முதலில் தாக்குதல்’ என்பது ராணுவத்தில் மிக முக்கியம். முதல் தாக்குதல் எப்போதும் வெற்றிகரமானதாகவும், திரும்பி தாக்காத வகையிலும், பலமானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இஸ்ரேலின் லோரா பாலிஸ்டிக் எவுகனை இந்திய விமானப்படைக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த ஏவுகணை, எதிரிகளைத் தடுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்வினை செய்யும் முன் அவர்களைத் தீர்க்கமாக முடக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகோய் ஜெட் விமானங்கள் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. அத்துடன் லோரா ஏவுகணைகளையும் இணைக்கும் பணியில் தற்போது இந்திய விமானப்படை தீவிரமாக இருக்கிறது.















