மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை

நாக்பூர்: ஜூலை 12-
தலை​வர்​கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தெரி​வித்​துள்​ளார். வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடை​யும் சூழலில் அவர் இவ்​வாறு கூறி​யிருப்​பது பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.
ஆர்​எஸ்​எஸ் மூத்த தலை​வர் மோரோ பந்த் பிங்க்லே குறித்த புத்தக வெளி​யீட்டு விழா நாக்​பூரில் 9-ம் தேதி நடை​பெற்​றது. ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் கலந்​து​கொண்​டு, புத்​தகத்தை வெளி​யிட்​டார். விழா​வில் அவர் பேசும்​போது, ‘‘உங்​களுக்கு 75 வயது ஆகிறது என்​றால், நீங்​கள் ஒதுங்​கிக் கொண்டு மற்​றவர்​களுக்கு வழி​விட வேண்​டும்’’ என்​றார்.
வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைகிறது. இதை சுட்​டிக்​காட்​டியே, மோகன் பாகவத் இவ்​வாறு கூறிய​தாக எதிர்க்​கட்​சிகள் தெரி​வித்​துள்​ளன. அவரது கருத்து பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: பிரதமர் மோடிக்கு செப்​டம்​பர் 17-ம் தேதி 75 வயது ஆகிறது என்​பதை மோகன் பாகவத் மிக அழகாக நினை​வுபடுத்தி உள்​ளார்.அதே​நேரம், மோகன் பாகவத்​துக்கு செப்​டம்​பர் 11-ம் தேதி 75 வயது ஆகிறது. இதே கருத்தை அவரிட​மும் பிரதமர் மோடி சொல்​லலாம். எப்​படியோ.. ஓர் அம்​பு, இரு இலக்​கு​கள்.இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.