தஞ்சாவூர்: ஜூலை 12-
மேட்டூர் அணையிலிருந்து நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. நீர் நிலைகளை மக்கள் கவனமாக அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தஞ்சையில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் திருவேங்கட உடையான்பட்டியின் கீழத்தெருவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நேற்று மாலை வீடு திரும்பவில்லை. மூன்று மாணவர்களில் ஜஸ்வந்த் எனும் மாணவர் 8ம் வகுப்பும், பாலமுருகன் மற்றும் மாதவன் ஆகிய மாணவர்கள் 5ம் வகுப்பும் படித்து வந்திருந்தனர். இவர்கள் மூவரும் ஒன்றாக பள்ளிக்கு சென்று வீடு திரும்பி வந்திருக்கின்றனர்.
குளத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் மூன்று மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர்.















