திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி, ஜூலை 14. திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஜூலை 13-ஆம் தேதி) 24 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, பக்தர்கள் சிலாதோரணம் வரை காத்திருந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 13-ஆம் தேதியான நேற்று மொத்தம் 80,193 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 33,298 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 4.43 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, பக்தர்கள் சிலாதோரணம் வரை காத்திருந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.