
வாஷிங்டன், ஜூலை 17- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், அடுத்தகட்டமாக 100 சதவீத வரியை சந்திக்க வேண்டியிருக்கும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஆனால், ரஷ்யா அதிபர் புதின், உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது. ட்ரம்ப்பை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இதனால் அடுத்த 50 நாட்களுக்குள் செக்ரைனுடன் சண்டை நிறுத்தம் சண்டை நிறுத்தம் செய்யவில்லை என்றால், ரஷ்யாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட், அமெரிக்க செனட் உறுப்பினர்களை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. 50 நாட்களுக்குள் ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அந்நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.மேலும், 50 நாட்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், அடுத்ததாக ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் 100 சதவீத வரி விதிப்பை சந்திக்க நேரிடலாம். எனவே, இந்நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதினிடம், உக்ரைனுடன் போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும். இல்லை என்றால் ரஷ்யா சந்திக்கும் பாதிப்பை, அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் மிகப் பெரிய அளவில் சந்திக்க நேரிடும்.