ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்காதீங்க; மீறினால் ரூ.ஆயிரம் அபராதம்

சென்னை: ஜூலை 24 ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தற்போதைய காலத்தில், மொபைல் போனில், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு லைக்ஸ், கமென்ட்களை பெறுவதற்கு ஏராளமான ஒரு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது தனது அன்றாட வாழ்வில் நடக்கும் சின்ன, சின்ன நிகழ்வுகளை கூட வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இதற்கு ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை ரீல்ஸ் எடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ரயில் நிலையங்களில் சாகசம் செய்து வீடியோ எடுப்பதை அதிகமானோர் பின்பற்றி வருகின்றன. ஓடும் ரயிலில் படியில் தொங்கி கொண்டு ரிலீஸ் எடுப்பதும், தண்டவாளத்தில் படுத்திருந்து ரீல்ஸ் எடுப்பதும் ரயில் வரும் போது தண்டவாளம் அருகே ஆபத்தை உணராமல் நின்று கொண்டு ரீல்ஸ் எடுப்பதையும் தற்போது இளைஞர்கள் கெத்து என நினைத்து கொண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.