பாசியம் நகர் முருகன் கோவிலில் சுமங்கலி பூஜை கோலகாலம்

பெங்களூர், ஜூலை 25-
ஆடி மாதம் வந்தாலே ஊரெல்லாம் உள்ள அம்மன் கோவில்களில் ஆரவாரங்களுடன் திருவிழாக்கள் களை கட்டி விடும். பெரிய கோவில்கள் முதற்கொண்டு சிறிய கோவில்கள் வரை திருவிழாக்கள் அமர்க்களமாக நடைபெறும். பெங்களூர் ஸ்ரீ ராமபுரம் பாசியம் நகரில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் இந்த கோவிலில் கேட்ட வரம் கொடுக்கும் அன்னை ஆகவும் வேண்டுதல்களை நிறைவேற்றி தரும் அம்மன் ஆகவும் ஸ்ரீ துர்க்கை அம்மன் அருள் பாலித்து வருகிறார் இங்கு நடைபெறும் இராகு கால பூஜை மிகவும் விசேஷம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்கிறார்கள் இந்த கோவிலில் இன்று 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு ராகு கால பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் இணைந்து சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்து செய்து நடத்தினர். ஆயுள் ஆரோக்கியம் செல்வம் தீர்க்க சுமங்கலித்துவம் திருமண பேரு குழந்தை பாக்கியம் போன்ற வரங்களை தரக்கூடிய துர்க்கை அம்மனை வேண்டியும் பிறர் நலம் வேண்டியும் மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் வளையல் கண்ணாடி சீப்பு, பூ திருமாங்கல்ய கயிறு ஒரு ரூபாய் நாணயம் மேந்தி கோன் பிரசாதம் அடங்கிய மங்கள மங்கள பொருட்களை பிறருக்கு அளிப்பது சிறப்பு. சிறக்கும் இந்த சிறப்பு வாய்ந்த பூஜையின் ஏற்பாடுகளை உஷா பத்மா ராஜேஸ்வரி சாந்தி லட்சுமி தேவிகா மகேஸ்வரி ஜெயந்தி சம்பத்தம்மாள் மீரா மற்றும் பலர் சிறப்பாக செய்து இருந்தனர்