தேர்தல் கமிஷன் திட்டவட்டம்

புதுடெல்லி: ஜூலை 25-
பிஹாரில் நிரந்​தர​மாக இடம் ​பெயர்ந்​தவர்​களை​யும், இறந்​தவர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளதை அனு​ம​திக்க முடி​யு​மா? என்று தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கேள்​வி யெழுப்பி உள்​ளார். பிஹாரில் வாக்காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக கடும் விமர்​சனங்​கள் எழுந்​துள்ள நிலை​யில் அவர் இவ்​வாறு கூறி​யுள்​ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: மிகச்சரியான வாக்​காளர் பட்​டியல் தயாரிப்பதில் தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படை​யான அணுகு​முறை யுடன் செயல்​படு​கிறது.
நியாய​மான தேர்​தல், வலு​வான ஜனநாயகத்​தின் அடித்​தளம் இல்​லை​யா? தகு​தி​யற்ற நபர்​களை முதலில் பிஹாரிலும் பின்​னர் நாடு முழு​மைக்​கும் வாக்​களிக்க அனு​ம​திப்​பது நமது அரசி​யலமைப்​பிற்கு எதி​ரானது.