பாங்காக்: ஜூலை 25-
எல்லையில் உள்ள சிவன் கோவில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட பிரச்சனை இருந்து வந்தது. இந்த பிரச்சனை இருநாடுகள் இடையேயான மோதலாக தற்போது உருவாகி உள்ளது. நேற்று இருநாடுகளின் ராணுவ வீரர்களும் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கம்போடியா மீது தாய்லாந்து போர் விமானங்கள் மூலமும், பீரங்கி பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ள நிலையில் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இருந்து வுருகின்றன. இருநாடுகளும் அண்டை நாடுகளாகும். இந்த நாடுகள் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மகாணமும் இருநாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
தாய்லாந்தின் சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா முயென் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது இந்த. இந்த கோவில் விஷயத்தில் தாய்லாந்து – கம்போடியா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இருநாடுகள் இடையேயான பிரச்சனை பெரிதாக தொடங்கியது. இதற்கிடையே தான் நேற்று முன்தினம் கன்னிவெடி வெடித்ததில் தாய்லாந்தை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அதன்பிறகு டென்ஷன் அதிகரித்தது. நேற்று திடீரென்று இருநாடுகள் இடையே மோதல் வலுத்தது. தாய்லாந்து சார்பில் எல்லையில் எஃப் 16 ரக போர் விமானங்கள் குவிக்கப்பட்டது. இருநாடுகள் இடையே கடும் மோதல் நடந்தது. இருநாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களும் மாறி மாறி தாக்கி கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த மோதலின்போது இருநாடுகளும் பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தினர். ராக்கெட் குண்டுகளை மாறி மாறி வீசி கொண்டனர். கம்போடியா மீது தாய்லாந்து எஃப் 16 ரக போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியது. கம்போடியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாய்லாந்து – கம்போடியா இடையே நடந்த இந்த மோதல் காரணமாக மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர். இதில் 2 பேர் ராணுவ வீரர்கள். மற்ற 14 பேரும் பொதுமக்கள் ஆவார்கள். மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி உள்ளன. அதுமட்டுமின்றி தாய்லாந்து தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை கம்போடியாவும், கம்போடியாவில் உள்ள தாய்லாந்து தூதரக அதிகாரிகள், மக்களை வெளியேற்ற இருநாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருநாடுகளும் மோதலை கைவிட வேண்டும் ஐநா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















