
திருப்பதி: ஜூலை 26 –
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் ஸ்ரீநிவாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் டிக்கெட்கள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி அலிபிரி நடைபாதை தொடக்கத்தில் கோசாலை அருகே பெருமாள் கோயில் உள்ளது.இங்கு தினமும் ஸ்ரீநிவாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் நடைபெறுகிறது. இதற்காக 150 ஆன்லைன் டிக்கெட்களும், நேரில் 50 டிக்கெட்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்லைனிலேயே தினமும் 200 ஹோமம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த டிக்கெட்டின் விலை ரூ.1,000 ஆகும். இதில் தம்பதி சமேதராக பக்தர்கள் கலந்து கொள்ளலாம். ஹோமம் முடிந்த பின்னர், இதில் பங்கேற்ற தம்பதி ரூ.300 டிக்கெட்கள் இரண்டை பெற்று, திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.