சென்னை சாலை பிரச்சனைக்கு வந்தது விடிவுகாலம்

சென்னை: ஜூலை 28 – சென்னையில் பல்வேறு சேவைத் துறைகளின் ஒப்பந்ததாரர்கள் சாலைகளைச் சேதப்படுத்திவிட்டு முறையாகப் பழுது பார்க்காததால், சென்னை மாநகராட்சி (GCC) நகரத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை முழுமையாகத் தானே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதாவது சென்னையில் சேதம் அடைந்த சாலைகளை இனி சென்னை மாநகராட்சியை சரி செய்யும். பொதுவாக சென்னையில் ஒரு இடத்தில் ஏதாவது காரணத்திற்காக குழி தோண்டப்படுகிறது என்றால் அந்த இடத்தை அதே துறை பழுது பார்ப்பார்கள். இவர்கள் சிமெண்ட் அல்லது மணல் மூலம் தோண்டப்பட்ட குழிகளை மூடுவார்கள். Also Read “விடிவெள்ளி.. சென்னையின் நுழைவு வாயிலில்.. நடக்கும் தரமான மாற்றம்.. அடித்து தூக்கும் மத்திய அரசு!” ஆனால் இவர்கள் இந்த பணிகளை சரியாக செய்வது இல்லை. இதனால் சென்னை மாநகராட்சி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சி (GCC) நகரத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை முழுமையாகத் தானே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி, சாலைகளைச் சேதப்படுத்தும் சேவைத் துறைகள் அனுமதி பெற்ற பின்னரே தேவையான கட்டணங்களைச் செலுத்தி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக மெட்ரோ வாட்டர் டிபார்ட்மென்ட் மற்றும் டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்) போன்ற சேவைத் துறைகள் சீரமைப்பு பணிகளை இத்தனை காலம் மேற்கொண்டன. சாலை சீரமைப்பு பணிகள் சென்னை மாநகராட்சி பொதுவாக முதலில் GSB (குழம்பு நிலை துணை அடித்தளம்), பின்னர் மணல், ஈரப்பத கலவை, தேவைப்பட்டால் M20 தர கான்கிரீட் மற்றும் பிட்டுமின் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. சாலை வெட்டுக்கள் ஏற்பட்டால், ஒற்றை வெட்டுக்களுக்கு 3.5 மீட்டர் அகலம் மற்றும் 30 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட பிட்டுமினஸ் கான்கிரீட் (BC) பூச்சுடன் சீரமைக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி வழிமுறைகளை வகுத்துள்ளது.
அதோடு, 40 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட BC பூச்சு மற்றும் குளிர் அரைத்தல் முறையும் பயன்படுத்தப்படும். கேபிள்கள் மற்றும் குழாய்கள் சாலை மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட வேண்டும். ஆனால், மற்ற துறைகள் ஈடுபடுத்தும் ஒப்பந்ததாரர்கள் இதைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. அவர்கள் பைப்லைன் அல்லது கேபிள் வேலைகளுக்காகச் செய்த சாலை வெட்டுக்களை வெறும் குப்பைகளைக் கொட்டியோ அல்லது குறைந்த தர சிமெண்ட்டைப் பயன்படுத்தியோ மூடிவிடுகிறார்கள் என்று புகார்கள் வைக்கப்படுகிறது. மாநகராட்சி மேற்கொள்ளும் ஒவ்வொரு சாலைப் பணியும் மூன்றாம் தரப்பு திட்ட மேலாண்மை ஆலோசகரால் (PMC) சரிபார்க்கப்படுகிறது. ஆனால், மற்ற சேவை நிறுவனங்கள் பெரும்பாலும் இந்த நடைமுறையைத் தவிர்த்துவிடுகின்றன. சாலை தொடர்பான பணிகளுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்தாலும், இறுதியில் மக்களால் மாநகராட்சிதான் குற்றம் சொல்லப்படுகிறது. இதைத் தடுக்கவும், ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், அனைத்து சாலை சீரமைப்புப் பணிகளையும் மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் ஆர்.பிரியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.