சென்னை: ஜூலை 29-
சமீபத்தில் Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த டாக்டர் காந்தராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தன.. கலவரம் நடந்து திமுக ஆட்சி கலைந்தபோது, முதல்வராக ஜெயலலிதா வந்திருக்க வேண்டியது, சிவாஜியால்தான் தடுக்கப்பட்டுவிட்டது.. 20 எம்எல்ஏக்களை சிவாஜி தன்னுடன் அழைத்து சென்றுவிட்டதை அதிமுகவே எதிர்பார்க்கவில்லை.. இதனால் ஜெயலலிதாவால் அப்போது முதல்வராக முடியவில்லை என்றெல்லாம் கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் நடிகர் திலகம், ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்தெல்லாம் தன்னுடைய பேட்டியில் விரிவாக பேசியிருக்கிறார். டாக்டர் காந்தராஜ், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “சிவாஜி கணேசனிடம், சின்ன அண்ணாமலை என்பவர் இருந்தார்.. அவர்தான் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற தலைவராக இருந்தார் அவர் ஒரு அரசியல்வாதி ஆவார்.. மூத்த தலைவர் ம.பொ.சியிடம் இருந்தவர்..
பிறகு, சிவாஜியை கட்சி ஆரம்பிக்க சொல்லி தூண்டிவிட்டதே இவர்தான்.. பிளான் செய்து வந்த எம்ஜிஆர் ஆரம்ப காலங்களில் பிரச்சார நாடகங்களில் கலைஞருடன் சேர்ந்து அவருடன் நடித்தார்.. நாடகங்களில் அண்ணாவுடன் சேர்ந்து நடித்தார் சிவாஜி.. ஆனால் நாடகங்கள் இல்லாத நாட்களில், அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையின் பைண்டிங் வேலையை செய்தார்.. இதற்காக திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றார் சிவாஜி ணேசன். இப்படி திராவிட இயக்கத்திலேயே வளர்ந்தவர் சிவாஜி.. அப்படியிருந்த சிவாஜியிடம், எம்ஜிஆர் புது கட்சி ஆரம்பித்துவிட்டதாக தூண்டிவிட்டு அவரை கட்சியை துவக்க வைத்தனர். ஆனால், சினிமாவில் எத்தனையோ புகழை சிவாஜி கணேசன் வைத்து கொண்டு, கட்சிக்காரரை அறிமுகப்படுத்தி கொண்டு, அவர் தொடர்ந்து செல்லவில்லை.. முக்கியமாக, அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவாஜி கட்சியை ஆரம்பிக்கவில்லை.. சிவாஜியிடம் அன்று 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருந்தனர்.. இதை வைத்தே ஜெயலலிதாவை ஆட்சி அமைக்காமல் தடுத்தவர் சிவாஜி கணேசன். அந்தசமயத்தில், என் மூத்த அண்ணன் ஜெயசீலனுடன் அன்னை இல்லம் வீட்டிற்கு நானும் சென்றேன்.. என்னுடைய இளைய அண்ணன் ராஜாராம் ஜானகி அணியில் இருந்தார். அவருக்கும் மூத்தவரான ஜெயசீலன் அண்ணன், சிவாஜிக்கு மிகவும் நெருக்கம்.















