மும்பை: ஜூலை 31 –
நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்குர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2008 செப்டம்பர் 29ல் மகாராஷ்டிராவின் மாலேகான், நாசிக்கில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியாரும், பாஜக எம்.பியுமான பிரக்யா சிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படை, இந்த வழக்கை முதலில் விசாரித்தது.
பின்னர் தேசிய புலனாய்வு முகாமை இவ்வழக்கை விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் மும்பை என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ராஜா ரஹீர்கர், சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி ஆகியோரையும் விடுதலை செய்தது.
இந்த சம்பவத்தில் பிரக்யா சிங் தாக்குருக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க அரசு தவறிவிட்டது.
பிரசாத் புரோஹித் வீட்டில் வெடிபொருள்கள் வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கைரேகை, வெடிமருந்து குப்பை என எதுவும் சேகரிக்கப்படவில்லை. அபினவ் பாரத் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணத்தைப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. குற்றச்சாட்டிற்கு உரிய ஆதராத்தை வழங்க தவறிவிட்டதாக கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி அளிக்க வேண்டும். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதலில் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையால்தான் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் அடிப்படையல், இந்து வலதுசாரி குழுக்களுடன் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் அடங்குவர். இவர்கள் இருவரும் இந்த சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்ததோடு, பின்னர் ஜாமீன் பெற்றனர்.
இந்த வழக்கு 2011 ஆம் ஆண்டில் என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது. அவர்கள் குற்றத்தை மீண்டும் பதிவு செய்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போதிருந்து, பல குற்றப்பத்திரிகைகள் மற்றும் துணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏழு குற்றவாளிகளுக்கு எதிராக முறையாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் 2018 இல் விசாரணை தொடங்கியது. விசாரணையின் போது, நீதிமன்றம் 323 அரசு தரப்பு சாட்சிகளையும் எட்டு தற்காப்பு சாட்சிகளையும் விசாரித்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
10,800 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட 400 க்கும் மேற்பட்ட பொருட்கள் உட்பட ஏராளமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. விசாரணையின் போது சுமார் 40 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர். அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வாதங்கள் ஏப்ரல் 2025 இல் முடிவடைந்தன. அரசு வழக்கறிஞர் தரப்பு 1,300 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான எழுத்துப்பூர்வ வாதங்களை சட்ட மேற்கோள்கள் மற்றும் ஆவண ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது. இதனையடுத்து ஏப்ரல் 19 அன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது













