சென்னை: ஆக. 2-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கடலுார், மயிலாடுதுறை, அரியலுார், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடலுார் மாவட்டத்தில் கன மழை கொட்டியது. மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.















