கோலி, பும்ராவை விளாசிய இர்பான் பதான்

லண்டன், ஆகஸ்ட் 5- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என சமன் செய்ததை அடுத்து இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான்-இன் ஒரு ட்வீட் சமூக வலைதளத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த ட்வீட், விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா-வை மறைமுகமாகத் தாக்குவதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். SKIP 2025 ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே பெரும் திருப்பங்கள் அரங்கேறின. மே 7ஆம் தேதி ரோஹித் சர்மா-வும், மே 12ஆம் தேதி விராட் கோலி-யும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இரண்டு சீனியர் ஜாம்பவான்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய இளம் இந்திய அணி, பல சவால்களைச் சந்தித்து தொடரை 2-2 என சமன் செய்து சாதனை படைத்தது. கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சு புயல் ஜஸ்பிரித் பும்ரா-வும் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. சர்ச்சையை கிளப்பிய இர்பான் பதானின் ட்வீட் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில், கடைசி நாளில் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், முகமது சிராஜ்-இன் அனல் பறக்கும் பந்துவீச்சால், இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார்