நீலகிரியில் அனைத்து சுற்றுலா மையங்களும் மூடல்

நீலகிரி: ஆகஸ்ட் 5-
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இன்று அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்படுகின்றன. அதே நேரம் அவசர உதவிக்கான எண்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ரெட் அலர்ட் எனில் 20 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று அர்த்தம். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழும்.
இதனால் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. Also Read “School Leave: புரட்டி எடுக்கப்போகும் அதி கனமழை! ரெட் அலர்ட் காரணமாக நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை” எனவே, முன்னெச்சரிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உதவிக்கு அழைக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இதனை தொடர்ந்து 9488700588 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை நீலகிரி மாவட்டத்தில் 60 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த காலத்தில் இயல்பாக 47 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால், இயல்பை விட 27% அதிகமாக மழை இந்த மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதேபோல கோயம்புத்தூரை பொறுத்தவரையில் இந்த காலத்தில் 41 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 64 செ.மீ அளவுக்கு அதாவது இயல்பை விட 54 சதவீதம் அளவுக்கு மழை அதிகமாக பதிவாகியுள்ளது.