
பெங்களூரு, ஆகஸ்ட் 5- ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் நடத்தி வரும் வேலைநிறுத்தத்தின் போது, கோலார் மற்றும் கொப்பலில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினர்.கோலார் நகர பேருந்து நிலையத்தில் கல் வீசப்பட்டதால் பேருந்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. கோலாரில் உள்ள பேருந்து நிலையம் காலை முதல் முற்றிலும் அமைதியாக இருந்தது. இப்போது அதிகாரிகள் இரண்டு பேருந்துகளை நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.
யெலபர்கா பணிமனையில் இருந்து வந்த பேருந்து நகரும் போது கல் வீசப்பட்டதால் சேதமடைந்தது. இதனால் பரபரப்பு நிலவியது.