
புதுடெல்லி: ஆக. 6-
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை. 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட்) ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: பிப்ரவரி முதல் 3 முறையாக ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.