ஜப்பான் டிவி தொடர் தாக்கத்தால் பெங்களூர் சிறுவன் தற்கொலை

பெங்களூரு: ஆக. 8-
உலகம் உலகம் முழுவதும் பெரம் வரவேற்பை பெற்ற ஜப்பான் நாட்டின் டிவி தொடரான டெத் நோட் என்ற சீரியலை பார்த்து அதன் தாக்கத்தால் பெங்களூர் சேர்ந்த ஒரு சிறுவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாக்கியுள்ளது
மூன்று நாட்களுக்கு முன்பு, சென்னம்மா கெரே அச்சுகட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். அவன் எழுதி வைத்து இருந்த உருக்கமான மரண குறிப்பு பறிமுதல் செய்யப்பட்டது. அதில் யார் மீதும் அவன் குற்றம் சாட்டவில்லை அனைவரையும் நேசித்து பாசமுடன் எழுதி இருந்தான். இவன் வீட்டில் அப்பா, அம்மாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருந்து இருக்கிறான் இவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை இந்த நிலையில் இவன் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்பது பெரும் அதிர்ச்சியையும் மர்மத்தையும் கிளப்பியது இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில் இவன் ஜப்பான் நாட்டு டெத் நோட் என்ற சீரியலை தொடர்ந்து பார்த்து வந்ததாகவும் அதில் வரும் ஒரு கதாபாத்திரம் போல் மாறி வட்டதாகவும் இவனது அறையில் டெத் ரோடு சீரியலில் ஒரு கதாபாத்திரத்தை இவன் வரைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. டெத் நோட் என்பது
என்பது ஒரு ஜப்பானிய அனிம் தொலைக்காட்சித் தொடராகும். இது சுகுமி ஓபா எழுதிய மங்கா தொடரை அடிப்படையாகக் கொண்டது. தாகேஷி ஒபாடா இதனை இயக்கியுள்ளார். இந்த தொடர், ஒரு இளைஞன் டெத் நோட் என்ற ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்து, அதன் மூலம் மனிதர்களைக் கொல்லும் சக்தியைப் பெறுவதைப் பற்றிய கதை ஆகும்.
இந்த வலைத் தொடரில் ஒரு கதாபாத்திரம் உள்ளது. ஹீரோ அந்த கதாபாத்திரம் சொல்வது போல் நடிக்கிறார். அந்த மாயப் புத்தகத்தில் யாருடைய பெயர் எழுதப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எழுதி, அவர்கள் எப்படி இறக்க வேண்டும் என்று யூகித்தால், அந்த நபர் அப்படியே இறந்துவிடுகிறார். அந்த வலைத் தொடரின் கதைக்களம் என்னவென்றால், எந்த கெட்டவனும் பூமியில் வாழக்கூடாது. அவர்கள் கொல்லப்பட வேண்டும்.
இந்த டெத் நோட் வலைத் தொடரைப் பார்த்த பிறகு காந்தர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. அவர் அதிகப்படியான ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. காந்தர் என்ற சிறுவன் பயன்படுத்திய மொபைல் போனை போலீசார் கைப்பற்றி விசாரணையை நடத்தி வருகின்றனர்