400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் விஷால் சாதனை

சென்னை:ஆக.22- 64-வது மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி பந்தய தூரத்தை 45.12 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன்னர் முகமது அனாஸ் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை 45.21 விநாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 21 வயதான விஷால் தென்னரசு கயல்விழி.
மேலும் இதன் மூலம் இந்த சீசனில் 400 மீட்​டர் ஓட்​டத்​தில் ஆசிய அளவில் விரை​வாக பந்தய இலக்கை எட்​டிய 4-வது வீரர் என்ற பெரு​மை​யை​யும் பெற்​றுள்​ளார். இந்த வகை​யில் ஜப்​பானின் யூகி ஜோசப் நகாஜிமா (44.84 விநாடிகள்), கத்​தா​ரின் அமர் இஸ்​மா​யில் இப்​ராஹிம் (44.90 விநாடிகள்), சீனா​வின் லியு​காய் லியு (45.06 விநாடிகள்) ஆகியோர் இந்த சீசனில் விரை​வாக இலக்கை அடைந்​துள்​ளனர்.
விஷால் இலக்கை 45.21 விநாடிகளில் எட்டி பிடித்த போதி​லும் உலக சாம்​பியன்​ஷிப் தகுதி நேர​மான 44.85 விநாடிகளை விட மிக​வும் பின்​தங்​கி​யிருந்​தார். மற்​றொரு தமிழக வீர​ரான ராஜேஷ் ரமேஷ் இலக்கை 46.04 விநாடிகளில் கடந்து வெள்​ளிப் பதக்​க​மும், ஹரி​யாணா​வின் விக்​ராந்த் பன்​சால் (46.17 வி​நாடிகள்​) வெண்​கலப்​ பதக்​க​மும்​ பெற்​றனர்​.