தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழை

சென்னை: ஆக. 26-
தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை மிதமான மழை தொடரலாம்.
தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை உயருவதற்கான வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.