127 கிலோ தங்கக் கடத்தல் -நடிகைக்கு ரூ.102 கோடி அபராதம்

பெங்களூரு, செப். 2- சட்டவிரோத தங்கக் கடத்தல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகை ரன்யா ராவ், தற்போது பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டு உள்ளார். அவருக்கு. வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் ரூ.102.55 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


விசாரணையில் 127 கிலோ தங்கம் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், டிஆர்ஐ ரூ.102 கோடி செலுத்துமாறு ரன்யா ராவுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


டிஆர்ஐ, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமலாக்கத் துறை ஏற்கனவே ரூ.37 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது. சொத்துக்களை இழந்து வெறுங்கையுடன் இருக்கும் ரன்யா ராவ் மற்றொரு சிரமத்தை எதிர்கொண்டு உள்ளார். அபராதத்துடன் ரூ.102 கோடி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


ரன்யா ராவ் தற்போது கோஃபிபோசாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக செய்ததாக டிஆர்ஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்தில் 127 கிலோ தங்கத்தை பெங்களூருக்கு கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.