அதிமுகவினர் குறித்துஉதயநிதி ஸ்டாலின் கிண்டல்

சென்னை: செப். 10-
‘ஒரே கட்சியில் பல கோஷ்டியாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக. உலகத்திலேயே தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சித் தலைவரை பஞ்சாயத்து செய்ய அழைக்கும் அதிமுகவினரை போன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 75 சதவீதம் பேர் உயர்கல்வி படிக்கின்றனர். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் மாவட்டமாக சென்று நிர்வாகிகளை சந்திக்க உள்ளேன். தமிழ்நாட்டை இளைஞர்களுக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் திமுகவுக்குத்தான் வாக்களிப்பாளர்கள் என முதல்வர் சொல்லி இருக்கிறார். விரைவில், 5 லட்சம் இளைஞர்களை திமுக இளைஞர் அணியில் இணைக்க உள்ளோம்.