புதுடெல்லி: செப். 18-
மத்திய தேர்தல் ஆணையம் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும் வாக்கு திருடர்களை தலைமை தேர்தல் கமிஷனர் பாதுகாப்பதாகவும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கோட்டையாக உள்ள தொகுதிகளில் பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் இது திட்டமிட்ட சதி என்றும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார் இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்
மத்திய தேர்தல் ஆணையத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2023 சட்டமன்றத் தேர்தலின் போது கர்நாடகாவில் காங்கிரஸ் கோட்டைகளில் இருந்து பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த வழியில், வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்களை நீக்க மாநிலத்திற்கு வெளியே இருந்து போலி உள்நுழைவுகள் மற்றும் தொலைபேசி எண்கள் பயன்படுத்தப்பட்டன. தனிநபர்களால் அல்ல, மென்பொருளைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டைகள் நீக்கப்படுகின்றன என்று அவர் கடுமையாக சாடினார்.
தில்லியில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்திய ஜனநாயகத்தை அழிப்பதை நிறுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார். ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் தரவை வெளியிட வேண்டும். என்றும் அவர் கூறினார்
வாக்கு திருட்டில் ஈடுபடுவோரைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாக்கிறார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். வாக்கு திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் பாம் வீசப்போவதாக ராகுல் காந்தி நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில், வாக்குத் திருட்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,
தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு
தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் காந்தி நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
முழு ஆதாரத்துடன் குற்றசாட்டை முன்வைக்கிறேன்
ஆதாரமின்றி எதையும் கூறவில்லை; எதிர்க்கட்சி என்பதால் முழு ஆதாரத்துடன்தான் கூறுகிறேன். 100% ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டையே முன்வைக்கிறேன்.
லட்சக்கணக்கான வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம்
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சமுதாயத்தினர், தலித்துகளை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்.
ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்குகள் திட்டமிட்டு நீக்கம்
கர்நாடக மாநிலம் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் 6,018 வாக்குகள் திட்டமிட்டு நீக்க முயற்சி. 6,018 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்திருந்தனர்.
கர்நாடகா வாக்குத் திருட்டு – அதிரடி ஆதாரங்களை வெளியிட்ட ராகுல்
தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கர்நாடகத்தில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
வாக்குகளை நீக்க போலி மொபைல் எண்கள் யாருடையது
கோதாபாய் என்ற பெயரில் போலியாக ஒரு லாக் இன்-ஐ உருவாக்கி 12 வாக்காளர்களை நீக்க விண்ணப்பித்துள்ளனர். தனது பெயரில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது தெரியாது என்று கோதாபாய் என்ற பெண் பேட்டி அளித்தார். வாக்குகளை நீக்க பயன்படுத்தப்பட்ட போலி மொபைல் எண்கள் யாருடையது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சூர்யகாந்த் என்பவர் பெயரில் 12 வாக்காளர்களை நீக்க 14 நிமிடத்தில் விண்ணப்பம். யார் பெயரில் வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டதோ அவர்களை மேடைக்கு அழைத்து வந்து ராகுல் காந்தி பேச வைத்தார்.
















