நாகை: செப். 20-
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். சென்னையில் இரந்து தனி விமான மூலம் திருச்சி வந்த வந்த விஜய் அங்கிருந்து கார் மூலம் நாகை சென்றார். வழியில் பல்வேறு இடங்களில் அவருக்கு உற்சாக வர வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்றிரவு வரை அவர் எப்படி நாகை வருகிறார் என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 2 மணிக்கு தனி விமானம் மூலம் விஜய் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு உடனடியாக அனுமதியும் வழங்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 9.15 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வருகை தந்தார். சரியாக 9.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். அவருக்காக ஒரே மாடலில் இரண்டு கருப்பு கார்கள், இரண்டு வெள்ளை கார்கள் என நான்கு கார்கள் தயார் நிலையில் நின்றன.
ஒரு கருப்பு காரில் விஜய் ஏறிச்சென்றார். மற்ற கார்களில் அவரது பாதுகாவலர்கள் மற்றும் பவுன்சர்கள் சென்றனர்.விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விஜய், புதுகை தேசிய நெடுஞ்சாலை- துவாக்குடி புறவழிச்சாலை வழியாக தஞ்சை நெடுஞ்சாலையை அடைந்து அதன்வழியாக நாகையை நோக்கி செல்கிறார். கடும் கெடுபிடி: கடந்த கால அனுபவங்கள் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் ஒருவர் கூட அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் விமான நிலைய நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கடுமையான தணிக்கைக்கு பிறகே விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
14 ஆண்டுகளுக்கு பின் விஜய் நாகை மாவட்டத்திற்கு வருவது கடவுள் இறங்கி வந்து காட்சி கொடுப்பதை போல் பார்ப்பதாக தவெக தொண்டர் ஒரு உற்சாகம் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு மீனவர் பிரச்சனைக்காக குரல் கொடுக்க நாகை வந்த விஜய், தற்போது தமிழக மக்களின் நலனுக்காக குரல் கொடுக்க வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், இன்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் தீவிரமாக மேற்கொண்டனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜய் திருச்சி புறப்பட்டார்.
சுமார் 40 நிமிட பயணத்திற்கு பின் திருச்சி விமான நிலையம் சென்றடைந்த விஜய், அடுத்ததாக சாலை மார்க்கமாக 145 கிமீ பயணத்து நாகையை அடைய உள்ளார். அவருக்கு மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன்பின் புத்தூர் ரவுண்டாரானா அருகே உள்ள அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக நாகை அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் தவெக தொண்டர்களும் குவியத் தொடங்கியுள்ளனர். விஜய் வருகை தொடர்பாக தவெக தொண்டர் ஒருவர் பேசுகையில், நாகையில் விஜய்யின் பிரச்சாரத்தை காண்பதற்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். முதற்கட்ட பிரச்சாரத்திலேயே தவெக தான் நம்பர் 1 என்பது தெரிந்துவிட்டது. ஏற்கனவே போட்டி திமுக – தவெக இடையில் என்று விஜய் அறிவித்திருந்தார்.
திருச்சி பிரச்சாரத்திற்கு பின் மக்கள் மனதில் தவெக நம்பர் 1 என்று முடிவாகிவிட்டது. அதனை உறுதிப்படுத்தும் கூட்டமாக நாகையில் நடக்கவுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நாகை மண்ணுக்கு விஜய் வரவுள்ளார். 2011ஆம் ஆண்டு மீனவர் பிரச்சனைக்காக விஜய் நாகை வந்து குரல் கொடுத்தார். 14 ஆண்டுகளுக்கு பின் தமிழக நலனுக்காக வருகிறார்.
மக்கள் வெள்ளத்தில் விஜய் மிதந்து வரப் போகிறார். விஜய் நாகை வருவது கடவுள் வருவதை போன்ற ஒன்று. கடவுள் இறங்கி வந்து காட்சி அளிப்பதை போன்ற ஒரு சம்பவம் இது. விஜய்க்காக மட்டுமே இங்கு வந்துள்ளோம். தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி மக்களுக்கானதாக இருக்கும். திமுக ஆட்சியை அகற்றுவதே மிகப்பெரிய மாற்றம். எம்ஜிஆர், அண்ணா, காமராசர் போல் சிறந்த ஆட்சியை விஜய் வழங்குவார் என்று தெரிவித்துள்ளனர்.
















