புதுடெல்லி, செப்டம்பர் 20-
நடிகர் மோகன்லாலுக்கு, 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2001-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 20190ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், சினிமாவுக்கு அவர் அற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை அவருக்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு, நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.