மைசூர்: அக். 9-
உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் போது நகரின் கண்காட்சி மைதானத்தில் பலூன்களை விற்க வந்த ஒரு சிறுமி சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொட்ட கெரே மைதானத்தைச் சுற்றியுள்ள சாலையில், பல இடங்களிலிருந்து வந்த வியாபாரிகள் தசரா வியாபாரத்திற்காக கடை கடைகளை வைத்து விற்பனை செய்தனர். இந்த நிலையில். நேற்று சாமுண்டேஸ்வரி கோயிலின் தெப்போத்சவத்தை முடித்துவிட்டு, இன்று வேறு எங்காவது செல்லத் தயாராகிக்கொண்டிருந்தனர்.
“குல்பர்காவைச் சேர்ந்த சுமார் 10 முதல் 12 வயதுடைய சிறுமி, பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தாள்.காலையில் மழை பெய்யத் தொடங்கி அனைவரும் விழித்தபோது, சிறுமியைக் காணவில்லை. தேடுதல் நடத்தியபோது, கூடாரத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் ஒரு மண் குவியலுக்கு அருகில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது,” என்று போலீசார் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் படை வந்து, சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது சிறுமி மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்று போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.















