
பெங்களூர்: அக்டோபர் 27
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள வயாலிகாவல் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ள அந்த பெண், சென்னையைச் சேர்ந்த தொழில்அதிபரான சந்தோஷ் ரெட்டி என்பவர் என்பது காதல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். கர்நாடகா மாநிலம் பெங்களூர் வயாலிகாவல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர்வருகிறார். அவருக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் பிரபல ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார். இந்த நிலையில், வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் சென்னையை சேர்ந்த தொழில்அதிபரான சந்தோஷ் ரெட்டி மீது அவர் புகார் அளித்துள்ளார்.தொழில் அதிபரான சந்தோஷ் ரெட்டி யார் என்றால், சென்னை அருகே இ.வி.பி. பிலிம் சிட்டி என்ற திரைப்பட நகரின் உரிமையாளர் ஆவார். அந்த பெண் போலீசில் அளித்த புகாரில் கூறுகையில், “நான் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறேன். எனக்கு, தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் அதிபரான சந்தோஷ் ரெட்டியுடன் அறிமுகம் ஆனார். அவரது உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக ஆடைகளை வடிவமைத்து கொடுக்கும்படி கேட்டார். அதுவும் அவரது மகள் மூலமாக தான் என்னை தொடர்பு கொண்டார். அதன்பிறகு நாங்கள் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு நல்ல நண்பர்களாக இருந்தோம் முதலில் குடும்ப நண்பர்களாக தான் பழகி வந்தோம். எனது வீட்டுக்கு சந்தோஷ் ரெட்டி வந்து சென்றார். அப்போது எனது தொழிலுக்காக அவர் பணம் முதலீடு செய்வதாக கூறினார். அத்துடன் அவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்படியும் என்னிடம் தெரிவித்தார். இதனால் எங்களுக்குள் இருந்த நட்பு விரிவடைந்தது. எனது வீட்டுக்கு வந்த சந்தோஷ் ரெட்டி, எனது மகள் என்னிடம் ஒரு நாள் பேசவே இல்லை. எனக்கு நீங்கள் உதவ வேண்டும் என்றார். நானும் அவரை சமாதானப்படுத்தினேன். பின்னர் திடீரென்று என்னை காதலிப்பதாக கூறினார். என்னையும், அவரை காதலிக்கும்படி கேட்டார். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதனால் அவர் என்னை தாக்கினார். மேலும் என்னை காதலிக்க வேண்டும், இல்லையெனில் 2 குழந்தைகளையும், உன்னையும் கொன்றுவிடுவேன் மிரட்டினார். எனவே சந்தோஷ் ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் புகாரில் கூறியிருந்தார்” இந்த புகாரின் பேரில் வயாலிகாவல் போலீசார், சந்தோஷ் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் கூறுவது உண்மை இல்லையா என்பது போலீசாரின் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். அதேபோல் இந்த புகார் தொடர்பாக தொழில் அதிபர் சந்தோஷ் ரெட்டி தரப்பில் விளக்கம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.















