சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: நவ. 3-
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்க இருக்கும் நிலையில், பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16 அல்லது 17ம் தேதிகளில் மண்டல பூஜை தொடங்குகிறது. அதேபோல ஜனவரி மாதம் 14 அல்லது 15ம் தேதிகளில் மகரவிளக்கு பூஜை கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாட்களில் சபரிமலைக்கு பயணிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சபரிமலைக்கு கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால், ரயிலின் தேவை அதிகமாக இருக்கும்.
இந்த தேவையை பூர்த்தி செய்யவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில். கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.06111), நவ.14ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து நவ.15ம் தேதி தொடங்கி ஜனவரி.17ம் தேதி வரை, இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மதியம் 12 மணிக்கு வரும். அதேபோல சென்னை சென்ட்ரலிலிருந்து வரும் 14ம் தேதி தொடங்கி ஜன.16 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06113) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறு மார்க்கமாக கொல்லத்திலிருந்து நவ.17ம் தேதி தொடங்கி ஜன.19ம் தேதி வரை திங்கட்கிழமை தோறும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06114) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.30க்கு சென்ட்ரல் வந்தடையும்.
மூன்றாவது சிறப்பு ரயில்(வண்டி எண் 06119) புதன்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இது நவ.19ம் தேதி தொடங்கி ஜன்.21 வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு கொல்லம் செல்லும். அங்கிருந்து அடுத்த நாள் புறப்படும் ரயில் (வண்டி எண் 06120) காலை 10.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30க்கு சென்டரல் வரும். நான்காவது சிறப்பு ரயிலை பொறுத்தவரை வியாழக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலிலிருந்து நவ.20ம் தேதி முதல் ஜன.22ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண் 06127) சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.50க்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக அங்கிருந்து நவ.21ம் தேதி தொடங்கி ஜன.23ம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு (வண்டி எண் 06128) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். ஐந்தாவது சிறப்பு ரயிலை(வண்டி எண் 06117) பொறுத்தவரை, நவ.22ம் தேதி தொடங்கி ஜன.24ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் இந்த ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.50க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.30க்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்திலிருந்து நவ.23ம் தேதி தொடங்கி ஜன.25ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை 6.30 மணிக்கு (வண்டி எண் 06118) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.