உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

வாஷிங்டன்: டிசம்பர் 2-
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி ஒப்பந்தம் குறித்து டிரம்ப் நிர்வாகம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறது என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: தேசிய காவல்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவன் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவதையும், வழக்கு தொரடப்படுவதையும், கடும் தண்டனை வழங்கப்படுவதையும் அமெரிக்க நிர்வாகம் உறுதி செய்யும்.இந்த தாக்குதல் நடத்தியவன் பைடன் நிர்வாகத்தின் கீழ், செப்டம்பர் 2021ல் அமெரிக்காவுக்குள் நுழைந்து உள்ளான். அதிபர் டிரம்ப் உடல் பரிசோதனையின் போது, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.புளோரிடாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்து டிரம்ப் நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது. அதிபர் டிரம்பும், அவரது குழுவும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர்.