சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை

சென்னை: டிசம்பர் 2- சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது.
தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள், சாலை வரி செலுத்​துதல் போன்ற பணி​கள் செய்து தரப்​படும்.புதிய வாக​னங்களை பதிவு செய்​யும்​போது, ஆர்டிஓ அலு​வல​கத்​துக்கு கட்​டா​யம் கொண்டு வர வேண்​டும் என்ற நடை​முறை இருந்தது. இதனால் வாக​னத்தின் உரிமை​யாளரோ அல்​லது டீலரோ, ஆர்​டிஓ அலு​வலத்துக்குச் செல்ல வேண்டும்.
இந்​நிலை​யில் மோட்​டார் வாகன புதிய சட்ட திருத்​தத்​தின்படி, சொந்த பயன்​பாட்டு வாக​னங்​கள் பதி​வின்​போது, அவற்றை அலு​வல​கத்​துக்கு கொண்டு வரத் தேவையில்லை என தெரிவிக்​கப்பட்​டது. ஆனால் இது தமிழகத்​தில் அமல்​படுத்​தப்​ப​டா​மல் இருந்​தது. இதுதொடர்​பாக, ஆட்​டோமொபைல் டீலர்​கள் சங்​கம் தொடர்ந்த வழக்​கில், சொந்த பயன்​பாட்​டுக்​கான புதிய வாக​னங்​களை, வட்டார போக்​கு​வரத்து அலு​வல​கத்துக்கு கொண்டு வரு​வ​தில் விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதையடுத்து சொந்த பயன்​பாட்​டுக்​கான புதிய வாக​னங்​களை பதிவு செய்ய, ஆர்டிஓ அலு​வல​கத்​துக்கு கொண்டு வர தேவை​யில்லை என்ற நடை​முறை நேற்று முதல் அமலுக்கு வந்​தது.
இதுகுறித்து போக்​குவரத்து ஆணை​யரக அதி​காரி​கள் கூறியதாவது: புதிய நடை​முறை​யால் டீலர்​களே, வாடிக்​கை​யாளரின் ஆவணங்​களை வாஹன் இணை​யதளத்தில் பதிவேற்​றி, பதிவுக்​கட்​ட​ணம் மற்​றும் சாலை வரியைச் செலுத்​தி, ஆன்​லைனிலேயே பதிவை முடிக்கலாம்.
ஆன்​லைனிலேயே கட்டணங்கள் செலுத்​தப்​படு​வதால், யாருக்​கும் தேவை​யின்றி பணம் கொடுக்​க வேண்​டிய நிலை இருக்​காது. இவ்​வாறு அவர்கள் கூறினர்​.