
டெஹ்ரான், டிச. 18- ஈரானில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஹார்மூஸ் தீவில் உள்ள கடல் தண்ணீர், கடற்கரை ஆகியவை ரத்த சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. இதுவும் ஒரு வறண்ட நாடாகும். இங்கு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வெயில் கொளுத்தி எடுக்கும். அதன்பிறகு நவம்பர் மாதம் ஏப்ரல் மாதம் வரை அவ்வப்போது மழை பெய்யும். மழை என்றால் நம் நாட்டை மாதிரியெல்லாம் பெய்யாது. எப்போவாது தான் மழை பெய்யும். ஈரானில் 2024ம் ஆண்டில் ஓராண்டுக்கான சராசரி மழை அளவு என்பது 23.519 மில்லி மீட்டர் என்ற அளவில் தான் இருந்தது. அதாவது 23 சென்டிமீட்டர் என்று வைத்து கொள்ளலாம். தற்போது ஈரானில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஈரான் தெற்கு பகுதியில் ஷார்மூஸ் தீவு உள்ளது. அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஹார்மூஸ் தீவில் உள்ள கடல் தண்ணீர் மற்றும் கடற்கரை பகுதிகள் திடீரென்று ரத்த சிவப்பு நிறத்தில் மாறி உள்ளன. இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடற்கரை சரிவுகளில் இருந்து ரத்த சிவப்பு நிறத்தில் தண்ணீர் வந்து கடலில் கலப்பதும், கடலில் ரத்த சிவப்பு நிறத்தில் அலை அடிப்பதும் தெரியவந்துள்ளது. இதனை பார்க்கும் பலரும் வீடியோக்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பலருக்கும் கடல் தண்ணீர் மற்றும் கடற்கரை எப்படி ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது ? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி தேடி வருகின்றனர்.




















