துபாயில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு.. கொட்டி தீர்த்த கனமழை

அபுதாபி: டிசம்பர் 19-
பாலைவன பூமியான, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பதிவாகியுள்ளதால், நகரின் முக்கிய வீதிகள் நீரில் மூழ்கி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, துபாய் காவல்துறை பொதுமக்களை எச்சரித்தது அறிக்கை விடுத்துள்ளது. அதில், “உங்கள் பாதுகாப்பிற்காக.. அடுத்த சில மணிநேரங்களில் நிலையற்ற வானிலை நிலவும் என்பதால் கவனமாக இருங்கள். வெள்ளிக்கிழமை நண்பகல் வரை அத்தியாவசிய தேவைக்காக அன்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும்” என்று கூறப்பட்டுள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் இன்றும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, துபாய் அரசு ஊழியர்கள் அனைவரும் தொலைதூரத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அபுதாபி மற்றும் துபாய் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள், இன்று வொர்க் ஃபரம் ஹோம் பணியை பின்பற்ற அந்நாட்டு மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பணியாளர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வந்துள்ளது. முன்னதாக, துபாய் அரசு ஊழியர்கள் அனைவரும் தொலைதூரத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை நண்பகல் வரை அத்தியாவசிய தேவைக்காக அன்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும்” என்று கூறப்பட்டுள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் இன்றும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அபுதாபி மற்றும் துபாய் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மற்றும் இன்று காலை பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லண்டன் காட்விக், ஹீத்ரோ, ஃபிராங்பர்ட் செல்லும் எமிரேட்ஸ் விமானங்களும், வார்சா மற்றும் பஹ்ரைன் செல்லும் ஃப்ளைதுபாய் சேவைகளும் ரத்தாகியுள்ளன. சாலைகளில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.