
வாஷிங்டன்: டிசம்பர் 19-
அமெரிக்க விசாவுக்கான விதிகளை டிரம்ப் அரசு கடுமையாக்கியுள்ளது. இதனால் கெடுபிடிகள் அதிகமாகவிட்ட நிலையில், இந்தியர்கள் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. பலருடைய நேர்காணல்கள் 2026 அக்டோபர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறதாம். அமெரிக்க அதிபரான டிரம்ப் அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார். மேலும், அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புவோரின் விசா விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹெச்-1பி விசா மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கெடுபிடிகள் அதிகமாக இருக்கிறது. விசா கிடைக்கவும் அதிகக் காலதாமதம் ஆகிறது.
நேரடிப் பாதிப்பு குறிப்பாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கே நேரடிப் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஹெச்-1பி விசாக்களை இந்தியர்களே அதிகம் பயன்படுத்தும் நிலையில், இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் கடந்த சில வாரங்களாக ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறதாம். இதனால் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.கிட்டத்தட்ட ஒரு வருடம் டிசம்பர் 2வது வாரம் நேர்காணலுக்குக் காத்திருந்தோரின் விண்ணப்பங்கள் முதலில் பிப்ரவரி மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே இப்போது அது அடுத்தாண்டு அக்டோபர் மாதத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஜனவரி மாதம் நடக்கவிருந்த விசா நேர்காணல்களும் இதேபோல 2026 இறுதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் விசா பெறுவதில் ஓராண்டு வரை தாமதம் ஆகலாம் என சொல்லப்படுகிறது.விசா கோரி விண்ணப்பிப்போரின் சோஷியல் மீடியா கணக்குகளை ஆய்வு செய்து, அதன் பிறகு விசா வழங்கும் திட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. அமெரிக்க அரசுக்கு எதிராக அல்லது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்போருக்கு விசா வழங்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி சோஷியல் மீடியா கண்காணிப்பு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதன் காரணமாகவே விசா நேர்காணல்கள் இப்படி மாதக் கணக்கில் ஒத்திவைக்கப்படுகிறது.




















