2028க்குள் நிலவுக்கு வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா

வாஷிங்டன்: டிசம்பர் 20-
விண்வெளி ஆய்வில் அமெரிக்காவின் இலக்குகளை துரிதப்படுத்தும் புதிய நிர்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத் திட்டு உள்ளார்.நிலவுக்கான லட்சிய ஆய்வுகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், சில உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, புதிய நிர்வாக உத்தரவில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
இதில், 2028க்குள் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவுக்கு செல்வது; 2030க்குள் நிலவில் ஒரு நிரந்தர கண்காணிப்பு மையம் அமைப்பது; செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப பணிகளை துவங்குவது உள்ளிட்டவை அடங்கும்.புதிய நிர்வாக உத்தரவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:* விண்வெளி பாதுகாப்பை முன்னுரிமையாக்குதல்.* வரும் 2028க்குள் விண்வெளி சந்தையில், 4.50 லட்சம் கோடி ரூபாயை புதிய முதலீடாக ஈர்க்க இலக்கு.* அடுத்த தலைமுறை விண்வெளி ஏவுகணை தடுப்பு அமைப்புகளை உருவாக்குதல்; விண்வெளி அச்சுறுத்தல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்.* வரும் 2030க்குள் ஐ.எஸ்.எஸ்., எனப்படும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பதிலாக ஒரு வணிக ரீதியிலான விண்வெளி நிலையத்தை உருவாக்குதல்.* நிலவில் சூரிய ஒளி கிடைக்காத நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க, அதன் மேற்பரப்பில் அணுசக்தி வாயிலாக இயங்கும் அமைப்புகளுக்கு அனுமதி.

  • ‘அமெரிக்க அரசின் இத்திட்டம் மிக பிரமாண்டமானது. எனினும், இதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்பம் பெரிய ச வாலாக உள்ளது’. என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நிலவில் தளம் அமைக்க போட்டியிடும் சூழலில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு விண்வெ ளி போட்டியை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.