30 இந்தியர் கைது

நியூயார்க், டிச. 25- அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 30 இந்​தி​யர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அமெரிக்க சுங்​கம் மற்​றும் எல்​லைப் பாது​காப்​புத் துறை (சிபிபி) சமீபத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கலி​போர்​னி​யா​வின் எல் சென்ட்ரோ செக்​டாரில் உள்ள எல்லை ரோந்​துப் படை​யினர், குடியேற்ற சோதனைச் சாவடிகளில் வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்த சோதனை​யின்​போது சட்​ட​விரோத​மாகக் குடியேறியதுடன் வணிக ரீதி​யான ஓட்​டுநர் உரிமம் வைத்​துக் கொண்டு லாரி ஓட்டி வந்த 49 பேரை கைது செய்​துள்​ளனர். இதில் 30 பேர் இந்​தி​யர்​கள் ஆவர்.