மற்றொரு ஹிந்து இளைஞர் வங்கதேசத்தில் அடித்து கொலை

டாக்கா, டிச. 26- நம் அண்டை நாடான வங்கதேசத்தில்,
மேலும் ஒரு ஹிந்து இளைஞர் நேற்று ஒரு கும்பலால் அடித் துக் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த கும்பல், அவருடைய உடலை, தீ வைத்து எரித்தது. இந்நிலையில்,
அந்நாட்டின் ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது ஹிந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் நேற்று கடுமையாக தாக் கியதில் படுகாயம் அடைந்த அவர்,
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.