பெங்களூர் மெட்ரோவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

பெங்களூர், டிச. 27- பெங்களூர் மெட்ரோ ரயிலில் பயணித்த 25 வயது இளம்பெண்ணுக்கு 55 வயது நிரம்பிய நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மெட்ரோ ரயிலில் அந்த பெண்ணின் அருகே அமர்ந்து அவர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்த பெண் அவரின் கண்ணத்தில் அறைந்து செக்யூரிட்டியிடம் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் நகரில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதும். இருக்கை கிடைக்காதவர்கள் மெட்ரோ ரயிலில் நின்றபடி பயணிப்பார்கள். இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயிலில் 55 வயது நபர் ஒருவர், தன் அருகே அமர்ந்திருந்த 25 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 25 வயது நிரம்பிய பெண் பணியை முடித்து மெட்ரோ ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பெங்களூர் மெஜஸ்டிக் மெட்ரோ ரயிலில் ஏறி அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே ஒரு ஆண், ஒரு பெண் இருந்தனர். ஒரு ஸ்டேஷனில் ஆண் இறங்கி சென்றார். இதனால் 55 வயது நிரம்பிய ஆண் ஒருவர் இளம்பெண் அருகே அமர்ந்தார். அந்த நபரின் பெயர் முத்தப்பா. இவர் மதுபோதையில் இருந்த நிலையில் தனது அருகே அமர்ந்திருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண்ணுடன் நெருக்கமாக அமர்ந்து தோளில் உரசியுள்ளார். அதோடு இளம்பெண் விலகி சென்றாலும் அவர் விடாமல் சீண்டி உள்ளார். இதனால் இளம்பெண் சிரமத்தை எதிர்கொண்டார்.