போலி மருந்து மாத்திரை உற்பத்தி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

புதுச்சேரி: டிசம்பர் 27-
புதுச்​சேரி​யில் போலி மருந்து, மாத்​திரைகள் தயாரிக்​கப்​பட்​டு, 16 மாநிலங்​களுக்கு விநி​யோகம் செய்யப்​பட்​டது தொடர்​பான விவ​காரத்​தில் பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த நபர்​கள் தொடர்பு கொண்​டிருப்​ப​தால், இதுகுறித்த விசா​ரணையை சிபிஐ மற்​றும் என்ஐஏ விசா​ரிக்​கலாம் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன் பரிந்​துரைத்​தார்.
இந்​நிலை​யில், அவர் நேற்று காலை திடீரென டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். இதையடுத்​து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்​திய அரசு நேற்று இரவு உத்​தர​விட்​டுள்​ள​தாக காவல் துறை உயர​தி​காரி​கள் தெரி​வித்​தனர்.
இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​டிருந்த ராஜா​விடம் சிபிசிஐடி அதி​காரி​கள் ஒரு வாரம் விசா​ரணை நடத்​திய நிலை​யில், அவர் மீண்​டும் காலாப்​பட்டு மத்​திய சிறை​யில் நேற்று அடைக்​கப்​பட்​டார். சிபிசிஐடி அதி​காரி​கள் கூறும்​போது, “வழக்​கின் ஆவணங்​களை சிபிஐ வசம் ஒப்​படைத்து விடு​வோம். அவர்​கள் தொடர்ந்து விசா​ரிப்​பார்​கள்” என்​றனர்​.