திமுகவை சீண்டிய பிரவீன்.. பதிலுக்கு ஆதரவாக வந்த ஜோதிமணி ப. சிதம்பரம்.. காங்கிரஸுக்குள் பிளவு

சென்னை: டிசம்பர் 29-
சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தனது கூட்டணிக் கட்சியான திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒரு தீவிரமான பேரத்தை நடத்தத் தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுபட்டுள்ள இரண்டு வெவ்வேறு கருத்துகளால் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்படும் என்று கதர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். தமிழக அரசை விமர்சனம் செய்கிறார்கள். திமுகவை விமர்சிக்கும் பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் கடன் அதிகமாக வைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின் நிலுவை கடன், தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் கடன், உ.பி-யைவிட 2 மடங்கு அதிகம். இந்திய மாநிலங்களில் வட்டி சுமை அதிகமாக கொண்ட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடன்/ உள்நாட்டு உற்பத்தி, கொரோனா காலத்தை விட அதிகமாக உள்ளது தமிழ்நாட்டின் கடன்சுமை கவலைக்குரியது” எனத் தெரிவித்துள்ளார். திமுகவிற்கு ஆதரவாக வந்த ப. சிதம்பரம், ஜோதிமணி இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தை ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில் முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற கட்டமைப்பு, நலத்திட்ட விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டில் முன்னிலை வகிக்கிறது. மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் உத்திரப்பிரதேசம் பின்தங்கி, நிறுவன நிர்வாகத்திற்குப் பதிலாக “புல்டோசர் ராஜ்” மாதிரியை ஊக்குவிக்கிறது.
கடனை அதன் விளைவுகளுடன் இணைத்தே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன் பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, வளர்ச்சி மற்றும் மனித வளத்தை வலுப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் நிதி கொள்கைகளும் இங்கு முக்கியம். தமிழ்நாடு அதிக வரிப்பணம் ஈட்டினாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது; உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமான நிதிப் பரிமாற்றங்களைப் பெறுகின்றன.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் இதே கருத்தை திமுகவிற்கு ஆதரவாக கூறி உள்ளனர். இன்னொரு பக்கம் ப. சிதம்பரம் , இலவச இருப்பிடச் சான்றிதழ்* ஜனவரி 25 வரை கட்டணமின்றி இருப்பிடச் சான்றிதழைப் பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏதுவாக கட்டணமின்றி வழங்க முடிவு. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மிகச் சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை நான் பார்த்து மகிழ்ந்தேன், என்று பாராட்டி உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுபட்டுள்ள இரண்டு வெவ்வேறு கருத்துகளால் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்படும் என்று கதர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் பிரவீன் சக்ரவர்த்தி திமுகவை விமர்சனம் செய்கிறார். இன்னொரு பக்கம் ஜோதிமணி, ப. சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவை பாராட்டுகிறார்கள். இதுதான் காங்கிரஸ் உள்ளே பிளவை ஏற்படுத்தும்.அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.