விஜய் தாமதமாக வந்தது ஏன்? ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம்I துருவி துருவி விசாரணை

டெல்லி, டிச. 30- கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகினர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நாளையும் (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடர்கிறது. மேலும்,
தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.
சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடை​பெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்தை சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்றனர். அவர்களின் விசாரணையை, உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது. இந்த வழக்​கில், டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் இன்று (டிசம்பர் 29) நடை​பெறும் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், தேர்​தல் மேலாண்மை பிரிவு பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, மாநில இணைச் செய​லா​ளர் சிடிஆர்​நிர்​மல்​கு​மார், கரூர் மேற்கு மாவட்​டச் செயலா​ளர் வி.பி.ம​தி​யழகன், காவல் கண்​காணிப்​பாளர் ஜோஷ் தங்​கை​யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன், டிஎஸ்பி செல்​வ​ராஜ், கரூர் நகர ஆய்​வாளர் ஜி.மணிவண்​ணன் ஆகியோ​ருக்கு சம்மன் அனுப்​பப்​பட்​டது.