பெற்றோர் பிரிந்து விட்டதால் சிறுமி தற்கொலை

பெங்களூரு: ஜனவரி 1- சென்னம்மனா கெரே அச்சுகட்டுப் பகுதியில் பெற்றோரைப் பிரிந்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.சென்னம்மனா கெரே அச்சுகட்டுப் பகுதியைச் சேர்ந்த லெக்னா (17) தற்கொலை செய்து கொண்ட சிறுமி. லெக்னா 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்து வீட்டிலேயே இருந்தார்.
குடும்ப தகராறு காரணமாக அவரது பெற்றோர் சமீபத்தில் பிரிந்தனர். அவரது தந்தை வேறு இடத்தில் வசித்து வந்த நிலையில், லெக்னா தனது தாயுடன் வசித்து வந்தார். எனக்கு எனது பெற்றோரிடமிருந்து அன்பு கிடைக்கவில்லை. நான் தனிமையாக உணர்கிறேன். எனது மரணத்திற்கு நான்தான் காரணம் என்று மரணக் குறிப்பை எழுதி வைத்துவிட்டு நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிம்ஸ் மருத்துவமனையின் பிணவறைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சி.கே. அச்சுகட்டுப்பாட்டு காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.