தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்

சென்னை: ஜனவரி 3-
தமிழகம் முழு​வதும் வாக்காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க இன்​றும், நாளை​யும் சிறப்பு முகாம் நடை​பெறுகிறது.
தமிழகத்​தில் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) பணி​கள் நடை​பெற்​றன. அதன்​பின், கடந்த டிச.19-ம் தேதி அனைத்து மாவட்​டங்​களி​லும், தொகுதி வாரி​யாக வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதன்​படி, தமிழகத்​தில் தற்​போது 5.43 கோடி வாக்​காளர்​கள் உள்​ளனர். பட்​டியலில் இருந்து 97.37 லட்​சம் பேர் நீக்​கப்​பட்​டனர். இதில் இறந்​தவர்​கள் மட்​டும் 26.94 லட்​சம் பேர். முகவரி​யில் இல்​லாதவர்​கள் என 66.44 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன.
இந்​நிலை​யில் டிச.19 முதல் வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. தகு​தி​யானவர்​கள் வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்​த​தாக, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 66.44 லட்​சம் பேரும், தங்​கள் பெயர்​களை சேர்க்க விண்​ணப்​பிக்க வேண்​டி​யுள்​ளது. அதனால் பொது​மக்​கள் வசதிக்​காக விடு​முறை நாட்​களான கடந்த டிச.27, 28-ம் தேதி​களில் தமிழகம் முழு​வதும் 75,000 வாக்​குச் சாவடிகளி​லும் சிறப்பு முகாம்​கள் நடை​பெற்​றன.
இதில் 27-ம் தேதி 2.56 லட்​சம் பேரும், 28-ம் தேதி 2.86 லட்​சம் பேர் என மொத்​தம் 5.43 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். இது​வரை வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க 7.37 லட்​சம் பேர், 9,535 பேர் பெயர் நீக்​கம் கோரி விண்​ணப்​பித்​துள்​ளனர். இதையடுத்து இன்​றும் (ஜன.3), நாளை​யும் தமிழகம் முழு​வதும் அனைத்து வாக்​குச் சாவடிகளி​லும் சிறப்பு முகாம்​கள் நடை​பெறுகின்​றன.
ஜனவரி 1-ம் தேதி​யுடன் 18 வயது பூர்த்தி அடைந்​தவர்​கள் மற்​றும் எஸ்​ஐஆர் பணி​யில் வாக்​காளர் பட்​டியலில் இருந்து பெயர் நீக்​கப்​பட்​ட​வர்​கள் படிவம் 6-ஐ வழங்க வேண்​டும். அத்​துடன் உறு​தி​மொழி படிவத்​தை​யும் வழங்க வேண்​டும். அதில் எஸ்​ஐஆர் படிவத்​தில் உள்​ளதை போன்​றே, தங்​களது அல்​லது தங்​கள் பெற்​றோரின், 2002, 2005 கால​கட்ட வாக்​காளர் பட்​டியலில் உள்ள விவரங்​களை குறிப்​பிட வேண்​டும். வாக்​காளர் பட்​டியலில் உள்ள பெயர்​களை நீக்க படிவம் 7, ஒரே தொகு​தி​யில் முகவரி மாற்​றம், பெயர் உள்​ளிட்​ட​வற்​றில் உள்ள பிழைகள் திருத்​தம், வேறு மாவட்​டம் மாறி இருந்​தா​லும் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்​டும்.இந்​நிலை​யில், ஏற்​கெனவே இப்​பணி​யில் ஈடு​பட்​டுள்ள அதி​காரி​களுக்கு பணி சுமை ஏற்​படு​வதை தடுக்க 234 தொகு​தி​களுக்​கும் கூடு​தலாக உதவி வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்​படி சிறப்பு வட்​டாட்​சி​யர்​கள், வட்​டார வளர்ச்சி அலு​வலர்​கள், பேரூ​ராட்சி செயல் அலு​வலர்​கள் உள்​ளிட்​டோர் உதவி வாக்​காளர் பதிவு அலு​வலர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். ஜன.18-ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க, திருத்த விண்​ணப்​பிக்​கலாம். பிப்​.17-ம் தேதி இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்பட உள்​ளது.