
பெங்களூரு: ஜனவரி 5- பெங்களூரில் ஓம் சக்தி கோவில் ஆண்டு திருவிழா தேர் ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு இந்த சம்பவம் ஜெகஜீவன் ராம் நகரில் நடந்தது. இந்த கல்வித்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வர் விளக்கம் அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது.
ஓம் சக்தி பக்தர்கள் மீது கல் வீசிய 4 அல்லது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வர் தெரிவித்தார்.
இன்று பெங்களூர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜேஜேஆர் நகரில் உள்ள விஎஸ் கார்டனில் உள்ள ஓம் சக்தி கோயில் அருகே நடந்த கல் வீசுதல் சம்பவம் குறித்து தகவல் அளித்தார். 15-17 வயதுடைய நான்கு அல்லது ஐந்து சிறுவர்கள் மாலாதாரிகள் மீது கற்களை வீசினர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இது சிறார் குற்றத்தின் கீழ் வருகிறது. காவல்துறை மேலும் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.

நேற்று இரவு, விஎஸ் கார்டனில் உள்ள ஓம் சக்தி கோயில் அருகே தேவியின் தேர் மற்றும் ஓம் சக்தி மாலை அணிந்த பக்தர்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினர். குற்றவாளிகள் கற்களை எறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஒரு குழந்தை, ஒரு இளம் பெண் மற்றும் ஒரு சிறுமி இந்த கல்வியில் காயமடைந்தனர். கல்விச்சி சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சக்தி மாலை ஆதரவாளர்கள் ஜேஜேஆர் நகர் காவல் நிலையம் முன் கூடி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

















